• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

வாழ்க்கை


05 ஜூன் 1963 – எரிபொருள் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றல்

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் அதிகாரம் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனமான இலங்கை பெற்றோலியக் கூட்டுஸ்தாபனத்துக்கு வழங்குவதற்கு 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தீர்மானம் எடுத்தார். வெளிநாட்டு செலாவனியை பேணுவதற்கு திருப்திகரமான பொறிமுறையொன்று இல்லாதமைனாலும் தடங்கலின்றி எரிபொருள் வழங்களை உறுதி செய்யும் முகமாகவும்…

19 ஜூன் 1963 – தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது அடக்குமுறைக்கு எதிரான கவலை

தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது காட்டபடும் பாரபட்சத்திற்கெதிராக ஜக்கிய நாட்டிலே கவலை தெரிவிப்பதில் எடுக்கபட்ட முயற்ச்சியில் இலங்கை பிரதான காரணியாக இருந்தது. இக்கொடுமைகளுக்கெதிராக உலகளாவிய கருத்தை ஒன்றுதிரட்டிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேரு, பர்மாவின் தலைவர் ஜெனரல் நெவின், லாவோஸின் பிரதமர் இளவரசர் சுவானா…

27 ஜூலை 1963 – அணு பரிசோதனை தடை ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்பு

அணு பரிசோதனைகளுக்கு எதிராக உலக அபிப்பிராயத்தை திரட்டும் நிலைபாட்டில் இருந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியட் ரஸ்யா போன்ற நாடுகள் அணு பரிசோதனை தடை ஒப்பந்தத்தை தொடக்கி வைத்ததை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மிகவும் வரவேற்றார். “இது உண்மையிலேயே உலக சமாதானதிற்கான பாதையில்…

09 – 14 ஒக்டோபர் 1963 – ஜக்கிய அராபிய குடியரசுக்கான விஜயம்

இலங்கைவுடன் இராஜதந்திர உறவு ஸ்தாபிக்க முன்பு 1956 ஆம் ஆண்டு எகிப்த்து நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட முக்கூட்டு ஆக்கிரமிப்பின் போது, இலங்கை மேற்கொண்ட நிலைபாட்டின் காரனமாக இலங்கை மீது மிகவும் நன்மதிப்பு கொண்ட எகிப்திய மக்கள் சார்பாக திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதி காமல் அப்துல் நஸார் மற்றும்…

14 – 17 ஒக்டோபர் 1963 – செக்கொஸ்லோவேக்கியாவிற்கான விஜயம்

பிரேக் நகரக்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் செக்கொஸ்லோவேக்கியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்தித்து இன்னும் காலணித்துவ ஆதிக்கதுக்கு அகப்பட்டு அதற்கு எதிராக பேராடும் நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான பிரச்சிணையில் தேவைபடும் கூட்டொருமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பவற்றை ஆராய்ந்தார். வர்தக மற்றும் வணிகதுறை விடயங்களும் பேச்சு வார்த்தைகளின்…

17 – 20 ஒக்டோபர் 1963 – போலந்துக்கான விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் சுற்றுப்பயணத்தில் போலந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். போலந்து நாட்டுடன் திருமதி எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்கள் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திருந்தார். வோர்சோ நகரில், பிரதமர் ஜோசப் சயிரேன்கிவெஸின் அழைப்பில் குதூகளமான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் விசேடமாக திருமதி பண்டாரநாயக்க அவர்களின்…

21 – 28 ஒக்டோபர் 1963 – சோவியத் யூனியனுக்கான விஜயம்

பனிப்போர் காலத்தினுள் இரண்டு வல்லரசுகளிடமும் தொடர்பு கொள்ளும் போது பயனுள்ள அணுகுமுறையை நடைமுறை படுத்தும் கொள்கையை பின்பற்றி, இரண்டு நாடுகளிடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தவும் தான் பதவியேற்ற பின் மூன்று வருடங்கள் போன்ற குறுகிய கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேலும் தொடரும் நோக்கத்தோடும், திருமதி…

22 நொவெம்பர் 1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கெனடியின் படுகெலை

1963 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கெனடியின் படுகெலையின் செய்தி திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கிட்டியது. இந்த இரண்டு தலைவர்களும் பதவியேற்ற ஒரு சில மாதத்திக்குள்ளேயே விரிவான முறையில் கருத்து பரிமாற்றம் நடந்தது. “பரிதாபமான சூழ்நிலையில் தனது கணவனை இழந்த ஒரு மனைவி என்ற முறையிலும் ஒரு…

08 – 15 டிசெம்பர் 1963 – பாகிஸ்தான் ஜனாதிபதி ஆயுப்கானின் விஜயம்

சர்வதேச மட்டத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஏற்படுத்தியுள்ள உறவுகளுக்கமைய, பாகிஸ்தானுடணும் உறவுகளை உறுதிபடுத்திகொள்ள விரும்பி பாகிஸ்தான் ஜனாதிபதி ஆயுப்கான் அவர்களை வரவழைத்து கௌரவித்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஆயுப்கான் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் உறை நிகழ்த்தினார்.

23 ஜனவரி 1964 – இனவெறிக் கொள்கைகளுக்கு எதிர்பு

தென் அப்பிரிக்காவின் இனவெறிக் கொள்கைகளுக்கு தனது கடினமான எதிர்பை தெரிவித்துள்ள திருமதி பண்டாரநாயக்க அவர்கள், செனட் சட்ட சபையில் பேசும் போது, “ நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால் இவ்வாரான தடைகள் பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் உலகத்தின் எல்லா நாடுகளும்…

26 – 29 பெப்ரவரி 1964 – சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயம்

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயம் அவரின் இலங்கைக்கான இரண்டாவது விஜயமாகும். இரண்டு நாடுகளுடன் இராஜரீக உறவு ஏற்படுத்திய 1957 ஆம் ஆண்டில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் முதல் முறையாக சீன பிரதமர் சௌ…

27 மார்ச் 1964 – இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் மரணம்

மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் மரணம் இந்தியாவையும் அவருடைய புத்திமதிகளையும் வழிகாட்டல்களையும் நம்பியிருந்த முழு அணிசேரா நாடுகளையும் அதிர்ச்சியில் ஆற்றியது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது பதவி காலப்பகுதியில் பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக பிரதமர் ஜவஹல்லாற் நேருடன் தொடர்ப்பு கொண்டுள்ளதோடு அணிசேரா இயக்கம் மற்றும்…

08 ஜூலை 1964 – 13 வது பொது நலவாய பிரதமர்களுடைய மாநாடு

பிராத்தானிய பிரதமர் சர் அலெக்ஸ் டக்லஸ் ஹொம் அவர்களால் லண்டன் நகருக்கு அழைக்ப்பட்ட 13 வது பொது நலவாய பிரதமர்களுடைய மகாநாடுக்கு இலங்கையின் தூதுக்குழுவுக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கினார். இனவெறிக் கொள்கைகளுக்கு மீண்டொருமுறை தனது எதிர்பை தெரிவித்துக்கொண்டு, மகாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்களுடைய மத்தியில்…

05 – 10 ஒக்டோபர் 1964 – கயிரோவில் இரண்டாவது அனிசேரா மாநாடு

யுகோஸ்லோவியாவின் தலைவர் மார்ஷல் ஜோஸப் பரோஸ் டிடோ அணிசேரா மாநாட்டின் தலைமைத்துவத்தை கயிரோவில் எகிப்த்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார்யிடம் ஒப்படைத்தார். மகாநாட்டில் பேசிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் விரைவாக மாறிவரும் உலக நிலமைகளுக்கு ஏற்றவாரு அணிசேரா இயக்கத்திற்கு புதிய சொற்பொருள் விளக்கமும் செய்கடமைகளின் தேவையையும் எடுத்துறைத்தார். “வல்லரசு…

27 ஒக்டோபர் 1964 – மகாவலி கங்கையையும் வறட்சி மண்டலங்களின் ஆய்வும் ஆரம்பம்

மகாவலி கங்கையையும் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள வறட்சி மண்டலங்களை ஆய்வு செய்யும் நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டமொன்று 1961 ஆண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இது சம்பந்தமான பெருந்திட்டமொன்று 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை, ஐக்கிய நாடு சபையின் விஷேட…

30 ஒக்டோபர் 1964 – பிரஜாயுரிமை சம்பந்தமான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்

பிரித்தானியா காலனித்தவ காலத்தின் போது இலங்ககையில் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களிலே வேலை செய்வதற்கென வரவழைக்கப்பட்ட கிட்டதட்ட பத்து இலட்சம் நாடற்ற மக்களின் பிரஜாயுரிமை சம்பந்தமான பிரச்சினையை தீர்பதற்கு இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியுடன் ஒப்பந்தம் எட்டினார். 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமதி பண்டாரநாயக்க…

03 டிசம்பர் 1964 – பாராளுமன்றத்தில் வாக்கு இழப்பு

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் ஒரு வாக்கு குறைவினால் தோற்கடிக்கப்பட்டு பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏற்படுத்திய அரசியல் ஸ்த்திரமற்ற நிலையை கையாளும் வகையிலும் இரண்டு வருடங்களுக்கு…

22 மார்ச் 1965 – பொதுத்தேர்தல் 1965

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் 41 ஆசனங்களையும் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கிய அதன் கூட்டனி மொத்தம் 55 ஆசனங்களையும் கைபற்றினாலும் இது ஆட்சியமைக்க போதாமைனால் 61 ஆசனங்களை கைபற்றிய ஐக்கிய தேசிய கட்சி அடுத்த அரசாங்கத்தை திரு.டட்லி சேனாநாயக்க தலைமையில் அமைத்தது.

05 ஏப்ரல் 1965 – எதிர் கட்சி தலைவர் பதவி

1965 ஆண்டில் நடத்திய பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்த பின், அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் 16,500 அதிகபடியான வாக்குகளால் வெற்றி பெற்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் எதிர் கட்சியில் அமர்ந்தார். இதனூடாக இவர் எதிர் கட்சி தலைவர் பதவி வகிக்கும் முதல் பெண்மனி என்ற முதல்…

08 ஜனவரி 1966 – டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான பேராட்டம்

டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான எதிர்பு பேராட்டத்தை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி முன்னெடுத்தார். இந்த உடன்படிககையின் ஒரு பகுதி தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்தை அமுல்படுத்துவது பற்றியாகும். இந்த சட்டம் பிரதமர் திரு எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களினால் 1958 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு…