• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

வாழ்க்கை


17 ஏப்ரல் 1946 – சிறிமாவோ இரத்வத்தையின் பிறப்பு

கண்டியின் பான்ஸ் இரத்வத்தே திசாவ மற்றும் மகாவெலதென்ன வலவ்வேயின் ரொசலின் மகாவெலதென்ன குமாரிஹாமி என்ற தம்பதிகளுக்கு பிறந்த சிறிமாவோ, குடும்பத்தின் பான்ஸ், பற்றீசியா, மகீ, சீவலீ, மற்றும் கிலிபட் ஆகிய ஆறு பிள்ளைகளின் மூத்தவராவர். ரட்டே மஹாத்மயா எனும் அவருடைய தந்தை ஆட்சி புரிவதில் முழுமையாக ஈடுபட்டிருந்ததுடன் தாயார்…

03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்

மகாவெலதென்ன வலவேயின் மூத்த மகள் ஹொரகொல்ல பெரிய முதலியார் சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மகனுடனான திருமணம் அவர்களின் குடும்ப பரம்பரை வழக்கங்களுடன் மிகவும் சிறப்பாக மற்றும் ஆடம்பரமான முறையில் நடாத்தப்பட்டது. அப்பொழுது சுகாதார மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கடமையாற்றி வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க…

1941 ஆம் ஆண்டில் – லங்கா மஹிலா சமித்தியில் இணைதல்

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள கிராமபுர நிலமைகளை மேம்படுத்துவதற்காகவும் அக்கிராமவாசிகளின் சமுதாய மற்றும் பொருளாதார நிலமைகளை உயர்த்துவதற்கும் நோக்காக கொண்டு 1930 ம் ஆண்டில் வைத்தியர் மேரி இரத்தினத்தினால் நிறுவப்பட்ட லங்கா மஹிலா சமித்திய (எல் எம் ஸ்) என்ற ஓர் மகளிர் இயக்கம் இயங்கி வந்தது. திருமணமாகி சில நாட்களுக்கு…

27 ஜூலை 1943 – சுனேத்திர டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு

“வெண்ட்வோர்த்” எனும் அவர்களுடைய முதல் கொழும்பு இல்லத்தில் பிறந்த சுனேத்திரா டயஸ் பண்டாரநாயக்க இரண்டு பிரதமர்களுடைய மூத்த மகளாவர். இவர் கலைத்துறைக்கும் சமுதாயத்தொண்டுக்கும் அர்ப்பணித்து வாழ்கிறார். ஓக்ஸ்பர்ட் பல்கழைக்கழகத்திலிருந்து தத்துவ சாஸ்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான சிறப்புப் பட்டம் பெற்ற சுனேத்திர, தாய் நாட்டுக்கு வந்து, தனது…

29 ஜூன் 1945 – சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு

பண்டாரநாயக்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவும் “வெண்ட்வோர்த்” இல்லத்தில் பிறந்தார். பாரிஸ் நகரின் சோபோர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்ற சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்க, இலங்கைக்கு திரும்பிய பின்பு நாட்டின் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பொறுப்பேற்றார். மேற்கு மகாணத்தின் முதலமைச்சராகவும், பிறகு பிரதமராகவும்…

15 பெப்ரவரி 1949 –அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனை பெற்றெடுக்கும் போது, சுகாதார மற்றும் தேசீய வைத்திய அமைச்சராக பணி புரிந்த எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்கள் அனுராதபுரையில் ஸ்ரீ மகா போதி அடியில் இருந்துள்ளார். இந்த பண்டைய கால தலைநகரின் பெயர் பிரகாரம் பெயரிடப்பட்ட அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ்…

26 செப்டெம்பர் 1959 – பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவின் படுகொலை

1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ம் திகதி பிரதமர் எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க கொலைகாரன் ஒருவனால் முன்னைய தினம் அவரது “ டின்டஜெல்” இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதின் விளைவாக உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. பிரதமராகி மூன்று வருடங்கள் மட்டுமே ஆகிய…

21 ஜூலை 1960 – உலகத்தின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுத்தல்

பிரதமராக தேர்ந்தெடுத்ததின் மூலம் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற கௌரவத்தை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பெற்றறார். 1960 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறுதி பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி பீடம் ஏறியது. தேர்தல் முடிவுகள் அறிவித்தல்…

05 ஆகஸ்ட் 1960 – மேல் சட்ட சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தல்

அரசியலமப்பின் படி, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக பதவியேற்று மூன்று மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் அல்லது செனட் சபை என்ற மேல் சட்ட சபையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். இதன் பிரகாரம், இளைய உறுப்பினரான எம்.பி.டி. சொயிஸா அவர்கள் மேல் சட்ட சபையில் அவரது உறுப்பினர் பதவியை…

17 மார்ச் 1961 – முதல் உத்தியோக பூர்வ விஜயம் – 11 வது பொதுநலவாய பிரதமர்களின் மாநாடு

உலக அரங்கில் அவருடைய இருத்தலை பதியச் செய்து கொண்டு, பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட 11 வது பொதுநலவாய பிரதமர்களின் மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றார். ஒரு பெண் அரச தலைவர் பங்கு பற்றும் முதல் பொதுநலவாய பிரதமர்களின் மகாநாட்டிலே ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஹறல்ட்…

01 – 06 செப்டெம்பர் 1961 – பெல்கிரேடில் முதல் அணிசேரா மாநாடு

யுகொஸ்லேவியாவிலே பெல்கிரேட் நகரில் நடைப் பெற்ற முதல் அணிசேரா மகா நாட்டிலே பங்குபற்றிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உலக பெருந்தலைவர்களாகிய நேரு, டிடோ,சுகர்னோ, நசார் மற்றும் நுக்ருமா போன்றோருடன் இணைந்து இந்த இயக்கத்தின் ஆரம்பக்கட்ட உறுப்பினரானார். இந்த மகா நாட்டிலே பேசிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள்…

21 நொவெம்பர் 1961 – விபசன்னா தியாண நிலையம்

1961 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 21ம் திகதி விபசன்னா தியாண நிலையத்தின் ஸ்தாபக தலைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இந்த நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். 1955 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கம் தியாணங்களுக்காக அற்பணிப்புடன் செயற்பட்டது. பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க…

12 டிசம்பர் 1961 – ஜக்கிய அமரிக்காவின் இறப்பர் கொள்கைக்கு எதிராக இலங்கை தலமை தாங்குதல்

ஜக்கிய அமரிக்காவின் இயற்கை இறப்பர் அகற்றல் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்பு அமெரிக்கா தன் கைவசமிருந்த இயற்கை இறப்பரை விடுவித்தல் செய்ததின் காரணமாக உலக சந்தையில் இறப்பரின் விலை சீக்கிரமாக வீழ்ச்சியடைந்ததினால், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உடனடியாக இலங்கையின் நிலமையை தெளிவாக விளக்கி இலங்கைக்கு இயற்கை இறப்பர் தொழிலின்…

27 ஜனவரி 1962 – வெற்றியுறாத சதித்திட்டம்

1962 ஆம் ஆண்டு ஜனவரி 27 ம் திகதி இரவில் முயற்சிக்கபட்ட சதித்திட்டத்தை சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையின் காரணமாக சதித்திட்டத்தை திட்டமிட்டவர்களை கைது செய்ததின் மூலம் முறியடிக்க முடிந்தது. பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விவகாரங்களுக்கான பாராளுமன்ற செயலாராக கடமையாற்றிய பிலீக்ஸ் டயஸ்…

02 மார்ச் 1962 – திரு விலியம் கொபல்லாவை ஆளுனராக நியமித்தல்

மகா ராணி குயின் எலிசெபத் ஐஐ அவர்களுடைய அனுமதியுடன் சர் ஒலிவர் குணதிலக்க அவர்களை பின் தொடர்ந்து திரு விலியம் கொபல்லாவ அவர்களை ஆளுனராக பதவியேற்பதை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உறுதி செய்து கொண்டார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் பிரதம நீதியரசர் எச். எச்.…

30 ஏப்ரல் 1962 – அமெரிக்க அணு பரிசோதனைக்கு எதிர்ப்பு

அணு குண்டுகளினால் ஹிரோசீமா மற்றும் நாகசாகி பிரதேசங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் அதன் பின்னர் பல தசாப்தங்களாக அனுபவித்த பயங்கர விளைவுகளையும் கருத்தில் கொண்ட இலங்கை, அமெரிக்காவினால் திட்டமிடப்படடிருந்த அணு சாதன பரிசோதனை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. “இவ்வாறான அணு சாதன பரிசோதனைகளை தடை செய்ய வேண்டுமென முழு உலகளாவிய…

23 ஒக்டோபர் 1962 – இந்திய பிரதமர் நேருவின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேரு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயம் மிக முக்கியமானது ஏனெனில் நாவின்னயில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டதும் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நிகழ்ச்சியாகும். இந்திய சீன உறவில் ஒரு பதற்றம் நிலவிய…

10 டிசம்பர் 1962 – ஆறு நாடுகளின் கொழும்பு மாநாடு

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவிய பதற்ற சூழ்நிலையை பின்தொடர்ந்து, ஆசிய கண்டத்திலுள்ள இந்த இரு வல்லரசுகளிடையே நிலவும் முரண்பாடுகளுக்கு முடிந்தளவில் ஒரு தீர்வு காணும் பெருட்டு பர்மா, கம்போடியா, ஈஜிப்ட், கானா, மற்றும் இந்தோநேசியா போன்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றுகூட்டி திருமதி பண்டாரநாயக்க அவர்கள் கொழும்பிலே ஒரு மகாநாட்டை…

08 ஜனவரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு சீனாவுடன் உடன்பாடு தேடுதல்

கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம்…

12 ஜவனரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு இந்தியாவுடன் உடன்பாடு தேடுதல்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் பதற்ற நிலமையை தீர்பதற்க்கு கொழும்பு மகாநாட்டின் போது எடுக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் உடன்பாட்டை எதிர்பார்த்தார். “யுத்தத்தினால் எந்த பிரச்சினையும் தீர்க்க படுவதில்லை என்பது சரித்தரத்தில் கற்றுக்கொண்ட பாடம் என நான்…